ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கே மெஜாரிட்டி… காங்கிரசில் இருந்து விலகிய கபில் சிபிலும் எம்பியாக தேர்வு..!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 9:50 am
Quick Share

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், தமிழகம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

எஞ்சிய கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் 16 இடங்களில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெற்றது. அரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் 5 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிபெற்றன.

முன்னதாக 11 மாநிலங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களில் பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தெலுங்கானா ராஷிடிரிய சமிதி 2 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 3 இடங்களிலும், யுவஜனா ஷர்மிகா ரிது காங்கிரஸ் 4 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி போட்சா 1 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்திலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், சமாஜ்வாதி 1 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் தல் 1 இடத்திலும், மற்றும் ஒரு சுயேட்சை எம்.பி. (கபில் சிபில்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 578

0

0