ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து..

14 April 2021, 8:58 am
Ramnath_Govind_Republic_Day_UpdateNews360
Quick Share

டெல்லி :உலகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய மக்களுக்கு குடியரசுத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உலகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்பட்டு 2021-ம் ஆண்டை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.

இதனிடையே, 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில்,  தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி, வளத்தை கொண்டுவரட்டும் என தெரிவித்தார்.

Views: - 33

0

0