வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்: 4 பேர் பலி
Author: kavin kumar15 October 2021, 11:16 pm
வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தின் இந்து கோவில்களில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடந்தது. அங்குள்ள கொமில்லா என்ற நகரிலுள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த கடுமையான தாக்குதலினால் துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அனைத்தும் சேதமடைந்தது. மேலும் அந்த கும்பல் கோவில்களில் பூஜைகளில் ஈடுபட்டிருந்த பக்தர்களையும் தாக்கினர். கொமில்லா நகரில் நடந்ததை போலவே அந்நகருக்கு அருகேயுள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ், பஜாரின், பெகுலா ஆகிய நகரங்களிலும் உள்ள இந்து கோவில்களின் மீதும் எதிர்பாராத விதமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்திற்கு காரணம் சமூக ஊடகங்களில் பரவிய சில தவறான தகவல் தான் என்று முதல் கட்ட விசாரணையில் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த கலவரம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா உறுதியளித்துள்ளார். இந்து கோயில்கள் மற்றும் நவராத்திரி விழா நடைபெறும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
0
0