8வது முறையாக ரெப்போவில் மாற்றமில்லை… ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் No Change : ரிசர்வ் வங்கி

Author: Babu Lakshmanan
8 October 2021, 12:00 pm
reserve bank - updatenews360
Quick Share

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இன்னும் மீண்டு வர வேண்டிய நிலையில் உள்ளோம். கொரோனா 2வது அலையின் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பூசி கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற செயல்களினால் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்க கூடிய கடன் விகிதத்தில் (ரெப்போ விகிதம்) மாற்றமின்றி தொடர்ந்து 4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவில் இருக்கும், என தெரிவித்தார்.

Views: - 279

0

0

Leave a Reply