“பல பாலிவுட் நட்சத்திரங்கள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களே”..? விஸ்வரூபமெடுக்கும் சுஷாந்த் சிங் விவகாரம்..!

27 August 2020, 2:07 pm
rhea_sushant_UpdateNews360
Quick Share

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண சர்ச்சையில் போதைப்பொருள் ஈடுபாட்டிற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்துவதில், குறைந்தது இரண்டு போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பட்டியலில் பல பாலிவுட் பிரபலங்களை உள்ளடக்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டைம்ஸ் நவ்வில் வெளியான ஒரு செய்தியில், “நான் உங்களிடம் நிறைய விஷயங்களைச் சொல்ல முடியாது. ஆனால் சில பாலிவுட் பிரபலங்கள் உட்பட ஜூஹு முதல் பாந்த்ரா வரை நிறைய பேருக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம்” என்று போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை அமலாக்க இயக்குநரகம் பகிர்ந்து கொண்ட போது தான் முதல்முறையாக “கடின மருந்துகள்’ மற்றும் ‘எம்.டி.எம்.ஏ’ போன்ற போதைப்பொருள் குறித்த சொற்கள் வெளியானது. பின்னர், ராஜ்புத்தின் குடும்பத்தினர் சுஷாந்திற்கு தெரியாமல் அவருக்கு ரியா மூலம் போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இன்று முன்னதாக, மறைந்த நடிகரின் தந்தை, ரியா சக்ரவர்த்தியை ஒரு கொலைகாரி என்றும் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். “ரியா சக்ரவர்த்தி நீண்ட காலமாக என் மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து வந்தார். அவர் தான் சுஷாந்த் இறப்புக்குக் காரணமான கொலைகாரி. விசாரணை அமைப்புகள் அவரையும் அவருடைய கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும்” என்று கே.கே.சிங் வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரிக்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) விசாரணையில் இணைந்துள்ளது. ரியா சக்ரவர்த்தி மீது என்.சி.பி ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து மேலும் விசாரிக்க ஒரு குழு மும்பைக்கு விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ‘போதைப்பொருள் அரட்டையில்’ பெயரிடப்பட்ட தொழிலதிபர் கௌரவ் ஆர்யா தனது பெயர் எந்த காரணமும் இல்லாமல் இந்த வழக்கில் இழுக்கப்படுவதாக கூறினார். “கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு ரியாவுடன் எந்த தொடர்பும் இல்லை. எனது குடும்பத்தினர் கார்னர் செய்யப்படுகிறார்கள். எனக்கு மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.” என்று அவர் கூறினார்.

Views: - 26

0

0