கொட்டும் மழையிலும் சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை… பரவசத்துடன் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 9:16 am
Quick Share

சென்னை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் நிறை புத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர, ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி, முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்காண நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை கொட்டும் மழையிலும் 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

Views: - 143

0

0

Leave a Reply