பாலகோட் வான்வழித் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..! மத்திய அமைச்சர்கள் விமானப்படைக்கு பாராட்டு..!

26 February 2021, 12:00 pm
balakot_airstraike_Updatenews360
Quick Share

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் தைரியம் மற்றும் விடாமுயற்சியுடன் மேற்கொண்டவிதிவிலக்கான நடவடிக்கைக்கு வீர வணக்கம் தெரிவித்தார். மேலும் தாக்குதல்களின் வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கான இந்தியாவின் வலுவான விருப்பத்தை காட்டுகிறது என்றார்.

“பாலகோட் விமானத் தாக்குதல்களின் ஆண்டு நினைவு நாளில், இந்திய விமானப்படையின் விதிவிலக்கான தைரியத்திற்கும் விடாமுயற்சியுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். பாலகோட் தாக்குதல்களின் வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கான இந்தியாவின் வலுவான விருப்பத்தை காட்டுகிறது. இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் நமது ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்று பாதுகாப்பு அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாலகோட்டின் வான்வழித் தாக்குதலின் இரணடாம் ஆண்டு நினைவு நாளில் விமானப்படைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

“2019’ஆம் ஆண்டு இதே நாளில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய இந்தியாவின் கொள்கைகளை இந்திய விமானப்படை மீண்டும் தெளிவுபடுத்தியது” என்று உள்துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் நாடும் அதன் வீரர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.

“புல்வாமா தாக்குதலின் தியாகிகளை நான் நினைவில் வைத்துள்ளேன். விமானத் தாக்குதல்களை துணிச்சலாக மேற்கொண்ட இந்திய விமானப்படையின் தைரியத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நாடும் அதன் வீரர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Views: - 7

0

0