ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ஆட்டோவில் ரகசிய அறை : மதுபானம் கடத்திய 4 பேருக்கு சிறை!!

9 June 2021, 7:55 pm
Auto Liquor Seized - Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் அருகே உள்ள பஞ்சலிங்க சோதனைச்சாவடியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து மது பாட்டில்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் மது விலை அதிகமாக உள்ளதால் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இருந்து தொடர்ந்து மது கடத்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில எல்கைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திரா – தெலுங்கானா இடையிலான கர்னூல் அருகே உள்ள பஞ்சலிங்க சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரண்டு ஆட்டோக்களை சோதனை மேற்கொண்டதில் ஆட்டோக்களில் ரகசிய அறை அமைத்து மது கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து ஆட்டோவில் பயணித்த 4 பேரை கைது செய்த போலீசார் ஆட்டோவிலிருந்து 210 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் ஓட்டை போட்டு ரகசிய அறை அமைத்து மது கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 178

0

0