புஷ்பா பட பாணியில் செம்மரக்கடத்தல்? ஆந்திராவில் சிக்கிய தமிழக அரசு பேருந்து!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 8:18 pm
TN Govt Bus -Updatenews360
Quick Share

திருப்பதி : சேசாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய பின் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் பயணித்த தமிழ்நாடுஅரசு பேருந்து ஆந்திராவில் பறிமுதல் செய்து ஓட்டுநர்,நடத்துனரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

திருப்பதியில் இருந்து பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை சந்திரகிரி போலீசார் நேற்று இரவு திருப்பதி -சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் பயணித்து கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 36 பேர் திடீரென்று பேருந்தில் இறங்கி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
திருமண கோஷ்டி போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்ததால் அனைவரும் செம்மரங்களை வெட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று போலீசார் கருதுகின்றனர்.

எனவே செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தை பறிமுதல் செய்த சந்திரகிரி போலீசார்,பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 566

0

0