இந்தியாவில் இதுவரை இத்தனை கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனையா? – ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்

Author: Aarthi
5 October 2020, 10:21 am
Corona_Test_UpdateNews360
Quick Share

டெல்லி: இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,02,685 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 7,99,82,394 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 9,89,860 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 44

0

0