திருப்பதியில் சித்தூர் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை : வேதஸ்தான அறிவிப்பால் குவிந்த கூட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2021, 3:12 pm
TTD Crowd - Updatenews360
Quick Share

ஆந்திரா : சோதனை முயற்சியாக இன்று முதல் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் ஏழுமலையானை வழிபட தினமும் 2000 இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பதி திருமலை ஆகிய ஊர்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனம் நடைமுறையை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு தினமும் 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தன. இதனால் தினமும் சுமார் ஒரு லட்சம் என்றிருந்த திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், விஐபி தரிசனம் ஆகியவை உள்ளிட்ட வகைகளில் சுமார் 25000 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் இலவச தரிசன டோக்கன் வினியோகத்தை மீண்டும் துவக்க முடிவுசெய்த தேவஸ்தானம் இன்று காலை 6 மணி முதல் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் தினமும் இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையில் வழங்கும் நடைமுறையை துவக்கி உள்ளது.

டோக்கன்கள் தேவையான பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

சில நாட்களில் சூழ்நிலைகளை பரிசீலித்து இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து அனைத்து பக்தர்களுக்கும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Views: - 316

0

0