மராட்டிய மாநிலத்தில் நவ.23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி..!!

8 November 2020, 11:55 am
mumbai school - updatenews360
Quick Share

மும்பை: மராட்டிய மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Uthav thakrey 01 updatenews360

இந்நிலையில், முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு தீபாவளி விடுமுறை முடிந்து வருகிற 23ம் தேதி முதல் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாணவர்கள் அல்லது அவரது வீட்டில் உள்ளவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்த மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கூடாது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 25

0

0