மகாராஷ்டிராவில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி…மீட்பு பணிகள் தீவிரம்..!!

Author: Aarthi
23 July 2021, 4:56 pm
Quick Share

மும்பை: மகாராஷ்டிராவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் 3 மணிநேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மழை வெள்ள மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கிய மேலும் 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நிலச்சரிவு உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

Views: - 193

0

0