திருப்பதி பக்தர்களுக்கு பரீட்சயமான புள்ளி மான்கள் : ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 5:41 pm
Thirupathi Deer - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி மலைப்பாதையில் துள்ளி விளையாடும் புள்ளிமான்களுக்கு உணவு வழங்கி ஆபத்தை உணராமல் பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

திருப்பதி மலையில் இருந்து திருப்பதி செல்வதற்காக பயன்படுத்தப்படும் முதலாவது மலைப்பாதையில் அமைந்துள்ள மான் பூங்கா அருகே இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான அளவில் புள்ளிமான்கள் இயற்கையான சூழலில் வசித்து வருகின்றன.

அடைத்து வைக்கப்படாமல் திறந்தவெளியில் வசித்து வரும் இந்த புள்ளிமான்கள் ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆகும். திருப்பதி மலையில் இருந்து திருப்பதிக்கு இரண்டு சக்கர வாகனங்கள், கார்,வேன் ஆகியவற்றில் செல்லும் பக்தர்கள் மான்கள் இருக்கும் பகுதியை அடைந்தவுடன் தங்கள் வாகனங்களை நிறுத்தி தங்களிடம் இருக்கும் உணவு பொருட்களை வழங்கி செல்பி எடுத்து கொள்வது வழக்கம்.

கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து இருந்தது. எனவே இந்தப் பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களும் வனப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் புற்கள், இலை, தழை ஆகியவற்றை உட்கொண்டு வாழ்ந்து வந்தன.

கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்பட்டு தற்போது பக்தர்கள் வருகை மீண்டும் துவங்கியுள்ளது. எனவே புள்ளி மான்களும் மீண்டும் சாலை ஓரங்களுக்கு வருகின்றன. பக்தர்களும் வழக்கம் போல புள்ளி மான்களுக்கு தின்பண்டங்களை கொடுத்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

புள்ளி மான்களை அடித்து சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் சிறுத்தை புலிகள் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இந்த விஷயத்தில் தேவஸ்தான நிர்வாகம் மற்றும் வனத்துறை ஆகியவை பக்தர்களின் மகிழ்ச்சி மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Views: - 579

0

0