ரெண்டு பொண்டாட்டி இருந்தும் நிம்மதியில்ல : மனைவி சம்மதத்துடன் காதலியை 2வது திருமணம் செய்த கணவன் தப்பியோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 6:40 pm
Andhra Husband - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். வீடியோக்களை எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்வது அவருக்கு வழக்கம்.

இதுபோல் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட போது அவருக்கு நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் காதலாக மாறியது.

இந்த நிலையில் ஏதோ காரணங்களால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் கல்யாண், விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் விமலாவை சந்தித்த நித்யஸ்ரீ தங்களுடைய காதல் பற்றி எடுத்து கூறி எனக்கும் உன் கணவனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கதறி அழுதார். உன்னுடைய கணவனை பிரிந்து என்னால் இருக்க இயலவில்லை என்றும் அப்போது கூறியிருக்கிறார்.

இதனால் மனவேதனை அடைந்த விமலா தன்னை போல் மற்றொரு பெண்ணான நித்யஸ்ரீயின் காதலை மதித்து தன்னுடைய கணவனுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவனிடம் அவருடைய கடந்த கால காதல் பற்றி எனக்கு தெரியும் என்று எடுத்து கூறி அந்த பெண்ணை நீங்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.

நித்யஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள கல்யாண் மறுத்தபோதும் அவரை சமாதானம் செய்து நித்யஸ்ரீக்கும் கல்யாணுக்கும் சில நாட்களுக்கு முன் விமலா முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்கு முன் நானும் உங்களுடன் தான் வசிப்பேன் என்று கூறிய விமலா, நித்யஸ்ரீ கல்யாண் ஆகியோரிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இதையடுத்து மூன்று பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 535

1

0