தனியாக காரில் சென்றாலும் முகக்கவசம் கட்டாயம்: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

7 April 2021, 12:34 pm
delhi mask - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. காரில் தனியாக சென்ற சில நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேர் இந்த நடைமுறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் காரை தனியாக ஓட்டிச் சென்றாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது.

மாஸ்க் சட்டம் சுரக்சா கவாச் கொரோனா பரவலை கண்டிப்பாக தடுக்கும். பொது இடம் என்பதால், காரில் ஒருவர் இருந்தாலும் கூட மாஸ்க் அணிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Views: - 24

0

0