“கொரோனா தாண்டவம்” ரயில் சேவைக்கான தடை தொடரும்..!

10 August 2020, 7:11 pm
Quick Share

தற்போதைய சூழலில் செப்-30 வரை ரயில் சேவையை தொடங்க முடியாது என மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று நோய் உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழலில், இந்தியாவிலும் இதன் ஆட்டம் சூடு பிடித்தது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரயில்சேவை, விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது ஊரடங்கு விதிமுறைகள் கனிசமாக தளர்த்தப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்குள் போக்கு வரத்து ஒரளவிற்கு அனுமதிக்கப்பட்டாலும், பிற மாநிலங்களுக்கு இடையேயான போக்கு வரத்திற்கு தடை நீடிக்கிறது.

இந்த சூழலில், பயணிகள் ரயில் சேவை தொடங்குவதற்கான மூகாந்திரங்கள் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகின.

ஆனால், இதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத சூழலில், தற்போது பயணிகள் ரயில் சேவையை செப்.30ஆம் தேதி வரை தொடங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Views: - 0

0

0