இந்தியாவின் கலாச்சாரத்தை உலகமே வியந்து பார்க்கிறது : ஆதி சங்கரர் சிலையை திறந்த பிரதமர் மோடி பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 11:17 am
Modi -Updatenews360
Quick Share

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் ஆதி சங்கராச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளியை ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, இன்று உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர், உத்திரகாண்டில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், 2013 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதிசங்கராச்சாரியாரின் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 12 அடி உயரம் கொண்ட ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.

“ஆன்மீகம் சார்ந்த இந்த பயணம் என்பது, என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நான் கேதார்நாத் சென்று வழிபடுவது வழக்கம்” என்று மோடி பேசினார்.

Views: - 543

0

1