அக்.22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி:மாநில அரசு அறிவிப்பு…!

Author: Udhayakumar Raman
25 September 2021, 9:13 pm
Karnataka Theatres -Updatenews360
Quick Share

மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையான கோவிட் -19 நெறிமுறைகளுடன் அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை நாட்டைத் தாக்கிய பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் திரையரங்குகளை மீண்டும் திறந்துவிட்டன. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து கோவிட் -19 பணிக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில், அக்டோபர் 7 முதல் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பக்தர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு ஒரு SOP ஐ வெளியிட்டது.

மேலும், அக்டோபர் 4 முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.மேலும், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5 முதல் 12 வகுப்புகளும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 வகுப்புகளும் மீண்டும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார். நேற்று நேற்று நடத்த கூட்டத்தின் முடிவில், கோவிட் -19 தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் தியேட்டர்கள் வரும் அக்டோபர் 22 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Views: - 153

0

0