மம்தா பானர்ஜியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி..! கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் எம்எல்ஏ..!

22 January 2021, 8:16 pm
Baishali_Dalmiya_TMC_UpdateNews360
Quick Share

திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சி, எம்.எல்.ஏ பைசாலி டால்மியாவை கட்சிக்கு எதிராக பேசியதற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். டால்மியாவை வெளியேற்றும் முடிவு டி.எம்.சியின் ஒழுக்காற்றுக் குழுவால் எடுக்கப்பட்டது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் செயல்பாட்டை டால்மியா பகிரங்கமாக விமர்சித்ததற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் நேர்மையான நபர்களுக்கு இடமில்லை என்று பாலி சட்டமன்ற உறுப்பினர் பைசாலி டால்மியா கூறினார். சமீபத்தில் மூத்த டி.எம்.சி தலைவர் ராஜீப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே டால்மியாவும் வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்ததற்காகவும், டால்மியா கட்சித் தலைமையை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டால்மியாவின் நீக்கம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை விட்டு விலகிய எதிர்ப்பாளர்களின் நீண்ட பட்டியலில் சமீபத்திய சேர்க்கையாகும். 

முன்னதாக இன்று, ராஜீப் பானர்ஜி எதிர்கால நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து, “நான் கணிப்புகளை நம்பவில்லை. எதிர்காலத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. வரும் நொடிகளில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று வரை நான் ஒரு கட்சி தொண்டராகவே உள்ளேன். அதை தொடர்ந்து செய்வேன்.” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0