ஆந்திரா – மதுரை சென்ற தனியார் பேருந்தில் தங்கம், வைரம் கடத்தல் : தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது!!

15 April 2021, 11:03 am
Andhra Gold Theft -Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைர கற்கள் பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தில சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஆந்திரா – தெலங்கானா மாநில எல்லையில் உள்ள பஞ்சலிங்கா சோதனை சாவடி அருகே எஸ்.பி. பக்கீரப்பா உத்தரவின்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐதராபாத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை சோதனை செய்த போலீசார் அதில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் வைத்திருந்த ஒரு பையில் 1கோடியே 4 ஆயிரம் மதிப்பிலான தங்க பொருட்கள் மற்றும் வைரக்கற்கள ஆகியவை இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வருமான வரி துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரனை நடைபெறுகிறது.

Views: - 33

0

0