பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதத்தில் பட்டம் வழங்க வேண்டும் : யூஜிசி உத்தரவு

Author: Babu Lakshmanan
9 April 2022, 11:50 am
UGC- Updatenews360
Quick Share

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதத்திற்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்வதாக நாடு முழுவதுதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது. தாமதமாக பட்டங்களை வழங்குவதால், மாணவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.

இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது, என்று கூறியுள்ளது.

Views: - 612

0

0