கார் மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்து..! 8 பேர் பலியான பரிதாபம்..!

2 December 2020, 11:28 am
Kaushambi_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, மணல் ஏற்றிய லாரி கவிழ்ந்ததில் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் கௌசாம்பியில் உள்ள கததம் கோட்வாலியின் தேவி கஞ்ச் சந்திப்பில், மணல் ஏற்றப்பட்ட லாரி, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் 8 பேர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் இன்னும் காருக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இறந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த உள்ளூர்வாசிகள் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அமித் சிங், எட்டு பேரின் மரணத்தை உறுதிப்படுத்தினார். ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில் மாவட்ட மருத்துவமனையில் ஒரு பெண் சிகிச்சையின் போது இறந்தார். விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஆரம்ப அறிக்கையின்படி, டயர் ஒன்று வெடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது எனத் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0