என்னது நொய்டாவில் ஏலியனா..? போலீஸ் விசாரணையில் ஷாக்..!

18 October 2020, 4:24 pm
Alien_Iron_Man_Greator_Noida_UpdateNews360
Quick Share

ஹாலிவுட் கற்பனைக் கதாபாத்திரமான அயர்ன் மேன் வடிவத்தில் ஒரு வாயு பலூன் நேற்று வானத்தில் பறந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் வசிப்பவர்களிடையே இது பீதியைத் தூண்டியது.

ரோபோவை ஒத்த விசித்திரமான பறக்கும் பொருள், கிரேட்டர் நொய்டாவின் டங்கூர் நகரத்தின் மீது காணப்பட்டது. மேலும் இது ஒரு ஏலியன் படையெடுப்பாக இருக்குமோ எனும் அச்சத்தைத் தூண்டியது.

ஆனால் பின்னர், இது காற்றில் நிரப்பப்பட்ட அயர்ன்மேன் வடிவ பலூன் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அது பட்டா பார்சால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயில் தரையிறங்கியது. அது ஏலியன் என தகவல் பரவிய நிலையில், அதைக் காண ஒரு கூட்டமே கூடியது.

பலூனின் ஒரு பகுதி கால்வாயில் பாயும் தண்ணீரில் விழுந்த சமயம், பலூன் சிறிது அசைய ஆரம்பித்தது. இது பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியது என டங்கவுர் காவல் நிலைய அதிகாரி அனில் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

கால்வாய் தண்ணீரில் ஓடிய பலூன் ஒரு வழியாக கால்வாயின் புதரில் சிக்கியது. மக்கள் மத்தியில் பதட்டத்திற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம் பலூனின் அசாதாரண வடிவம் தான்.

அதன் நிறம் மற்றும் வடிவமைப்பு, கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன்மேன் போல இருந்தது. இதனால் இது அந்நியராக இருக்கலாம் எனக் கருதி மக்கள் பயந்தனர் என பாண்டே கூறினார்.

பலூன் நண்பகலில் வெளியேற்றப்பட்டதாகவும், அதன் வாயுவை இழந்துவிட்டதால் அது கீழே வந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். அதில் தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லை என்றும் ஆனால் அதை யார் காற்றில் மிதக்க விட்டார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வானில் பறந்த இந்த அசாதாரண பொருளால் சிறிது நேரம் பீதியில் ஆழ்ந்த மக்கள், அது என்னவென்று தெரிந்த பிறகு ஒருவழியாக நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply