குரங்கிற்கு இறுதி ஊர்வலம்…விருந்து வைத்து மரியாதை செலுத்திய கிராம மக்கள்: மத்திய பிரதேசத்தில் விநோதம்.!!

Author: Aarthi Sivakumar
12 January 2022, 5:09 pm
Quick Share

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்தி, அன்னதானம் இட்டு சோகத்தை வெளிப்படுத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வாழ்ந்து வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலம் நடத்தினர்.

மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்தனர். ஹரி சிங் என்பவர் குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார். மேலும் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து குரங்கின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பெரிய உணவு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

உணவு விருந்தில் 1,500 பேர் பங்கேற்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொது இடத்தில் கூடியதற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊரில் வளர்ந்த குரங்கு ஒன்றுக்கு கிராமமே கூடி இறுதி மரியாதை செலுத்திய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 132

0

0