வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த காதலன்..! முகத்தில் ஆசிட் வீசிய காதலி..! ஆந்திராவில் வெறிச்செயல்..!

5 September 2020, 9:29 am
Acid_Attack_UpdateNews360
Quick Share

கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் நேற்று 20 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலனின் பெற்றோர் அவருக்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ததாகவும், அவர் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் காதலன் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, காதலியிடம் அவருடன் இணைந்து வாழ முடியாது என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட காதலன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினர் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறினார். இந்நிலையில் ஆத்திரமடைந்த குற்றம் சாட்டப்பட்ட காதலி, காதலனின் முகத்தின் மீது ஆசிட் வீசியுள்ளார். “நான் அவருக்காக மூன்று வருடங்கள் கல்லூரியைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றினார். இதனால்தான் நான் அவர் மீது ஆசிட் ஊற்றினேன்.” என்று குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாறாக, ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர், தாங்கள் இருவரும் பரஸ்பரம் பேசி ஒப்புக்கொண்டுதான் தங்கள் உறவை முடித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் வேறொருவரை மணந்தார்.

பெந்தா கோட்டாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பெண் அவர் மீது ஆசிட் வீசியதாக நந்தியல் தாலுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

உண்மையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள காதலி, ஒரு வாரத்திற்கு முன்பே, தனது காதலனின் கையில் ஆசிட் ஊற்றியுள்ளார். அப்போதே சுதாரித்து புகார் தெரிவித்திருந்தால் தற்போது முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் நடந்திருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர் நந்தியல் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று ரெட்டி மேலும் கூறினார். 
இதற்கிடையே இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Views: - 0

0

0