‘ஐயோ தடுப்பூசியா…எனக்கு வேண்டாம்ப்பா’: அடம்பிடித்த பெண்…குண்டுக்கட்டாக தூக்கிய சுகாதாரத்துறையினர்..!!

Author: Aarthi Sivakumar
2 December 2021, 3:45 pm
Quick Share

கர்நாடகா: மாண்டியா பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அடம்பிடித்த பெண்ணை சுகாதாரத்துறை ஊழியர்கள் குண்டுகட்டாக தூக்கிச்சென்று தடுப்பூசி செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா முழுவதும் 100 சதவீதம் தடுப்பூசி நிலையை எட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட பயந்து,வித்தியாசமான காரணங்களை சொல்லி எஸ்கேப் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளை பெண் ஒருவர் விரட்ட முயற்சித்துள்ளார். ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினரே அவரை குண்டுகட்டாக தூக்கி வந்து, சுகாதாரத்துறையினரை தடுப்பூசி செலுத்த சொல்கின்றனர்.

சுகாதாரத்துறையினரோ அந்த பெண்ணின் கை, கால்களை பிடித்து வலுக்கட்டாயமாக தடுப்பூசி செலுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு தடுப்பூசி போட இவ்வளவு பாடாய்படுத்தியும் விடாப்பிடியாக சுகாதாரத்துறையினர் விடாப்பிடியாய் தடுப்பூசி செலுத்தி கடமையை நிறைவேற்றினர்.

Views: - 251

0

0