நடுரோட்டில் இளைஞர் ஓட்டிய வண்டி.! வியப்பில் ஆழ்த்திய வீடியோ.!!

30 June 2020, 3:01 pm
gyroscooter -Updatenews360
Quick Share

அப்பப்பா, கொரோனா பீதியால் உலகமே வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், மெல்ல இயல்வு நிலை திரும்பி வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள், மறுபடியும் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லாமல் நெரிசலோடு காணப்பட்டு வருகிறது.

இதனால் வாகனஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு சுலபமான வழி உள்ளது என இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் ஹோவர் போர்டு என் சொல்லக்கூடிய வகையில் யுனிசைக்கிளை ஓட்டி வந்துள்ளார்.

கைரோ ஸ்கூட்டர் என அழைக்கப்படும் இந்த சைக்கிளை காலால் வைத்து உந்தினால் போதும், அதற்கென உள்ள வேகத்தில் செல்லும். குறிப்பிட்ட ஒரு வேகம் வரை செல்லக்கூடிய அந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் லாவகமாக ஓட்டிச் செல்கிறார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.