தொடரும் கோலியின் சோகம்… இந்த முறை மொத்த டீமும் சொதப்பல்… 8 ஓவரில் மேட்சை முடித்த ஐதராபாத்.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 11:03 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரூ அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் அதிர்ச்சி காத்திருந்திது. கேப்டன் டூபிளசிஸ் (5), கோலி (0), ராவத் (0), ஆட்டமிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, வந்த வீரர்களும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், பெங்களூரூ அணி 68 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 12 ரன்களும், 15 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர் நடராஜன், ஜென்சென் தலா 3 விக்கெட்டுக்களும, சுஜித் 2 விக்கெட்டும், புவனேஸ்வர், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், பெங்களூரூ அணி தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்று மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, 2017ல் கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் குறைந்தபட்ச ரன்னாகும்.

குறைந்த இலக்கை எதிர்கொண்டு ஆடிய ஐதராபாத் அணி 8 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் வர்மா 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Views: - 618

0

0