மருமகளை நடிக்கவிடாமல் தடுக்கும் மாமனார்.. கண்டுகொள்ளாமல் 71-வயது நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிகை..!

Author: Vignesh
29 September 2022, 5:45 pm
Quick Share

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு குடும்பத்தை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் ஜோதிகா சூர்யாவை காதலிக்கும் போது முதல் வில்லனாக நின்றவர் சிவக்குமார் தான். பின் 4 வருட காத்திருப்பு பின் மனமுவந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் சிவக்குமார்.

மாமனார் சொல்படி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்த ஜோதிகா சில வருடங்களுக்கு முன் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இதன்பின் சூர்யாவுடன் 2டி தயாரிப்பு நிறுவனத்தையும் பார்த்து வந்தார்.

இடையில் ஜோதிகாவின் பெயர் 2டி நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதனால் நடிப்பையும் மீண்டும் விட்டுவிட்டார் ஜோதிகா.

கணவருடன் சமீபத்தில் அவுட்டிங் செய்து வந்த ஜோதிகா தற்போது கண்டநாள் முதல் படத்தின் இயக்குனர் வி பிரியா இயக்கும் ஒரு படத்திலும், பொன் பார்த்திபன் மாஸ்டர் படத்தில் திரைக்கதை எழுதியவருடன் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

மேலும் 71 வயதான மம்முட்டியின் மலையாள படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். மாமனாரின் எதிர்ப்பை மீறி இப்படி ஜோதிகா நடிக்க ஆர்வம் காட்டுவதை பலர் பாராட்டி வருகிறார்கள். இதற்கு சூர்யாவின் ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது.

Views: - 531

0

0