தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Author: Rajesh
20 February 2022, 4:25 pm
Quick Share

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கூட தொடவில்லை.

நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றையும் பெட்டிக்குள் வைத்து மூடி முத்திரை வைத்தனர். பின்னர் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

மாநிலம் முழுவதும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை 179வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்

சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-ம் வார்டு வாக்குச்சாவடிகள் 16 எம்,15 டபிஎல்யூ இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

திருவண்ணாமலை நகராட்சி 25ம் வார்டு வாக்குச்சாவடிகள் 57 எம், 57 டபிஎல்யூ இல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 540

0

0