நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் பரோட்டாவுடன் ஆண் சடலம் மீட்பு : மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 8:20 pm
Vijay Office Dead - Updatenews360
Quick Share

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை ”விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, படிப்பதற்கு தேவையான வசதிகள் செய்து தருவது, ரத்ததான முகாம், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது.

இங்கு ரசிகர்களை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்துவார். சில சமயங்களில் தனது இயக்கத்தினரை மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பனையூர் அலுவலகத்திற்கு வந்து விஜயை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு முக்கியமான இந்த அலுவலகத்தில் உட்புறப் பகுதிகளை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. இதற்காக வெளியாட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன் (வயது 34) என்பவர் அலுவலகத்திலேயே தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்துள்ளார். கடந்த சனிக்கிமையன்று சம்பளம் வாங்கி கொண்டு குடுமபத்தினரை காண பழைய வண்ணாரப்போட்டைக்கு சென்றுள்ளார்

பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மதுபோதையில் விஜய் அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசியாக உள்ளது என்றும், பரோட்டா வாங்க 100 ரூபாய் கேட்டுள்ளார்.இதையடுத்து 100 ரூபாய் வாங்கிகொண்டு

Views: - 557

4

6