அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 2:12 pm
Raghupathi - Updatenews360
Quick Share

அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு

யார் தவறு செய்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தி உள்ளது தமிழக முதல்வருக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டுகிறது

எங்களுக்கு தகவல் கிடைக்கின்ற போது எந்த பதவியில் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று அந்த தவறை கையும் களவுமாக பிடிப்பதுதான் லஞ்ச ஒழிப்பு துறையின் கடமை

அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் எள்ளளவு கூட பயப்பட மாட்டோம் என்று தெளிவாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த அரசு பணியாது அஞ்சாது, அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது.

இருப்பினும் அப்பாவு துணிச்சலானவர். அவருக்கு வந்த மிரட்டலை அவர் வெளி கொண்டு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பான சட்ட மசோதாவில் ஆளுநர் கேட்கின்ற விளக்கங்களை அளித்து மீண்டும் அதனை ஆளுநருக்கு திருப்பி அனுப்புவோம்.

என் மீதும் அமைச்சர்கள் கே என் நேரு பெரியசாமி ஆகியோர் மீது அதிமுக அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நாங்கள் நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம் அதன்படி நீதி எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது
உச்ச நீதிமன்றத்திலும் சரி உயர்நீதிமன்றத்திலும் சரி இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது

தொடர்ந்து என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டு என்னுடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தமிழாக்கத்துறை மீது அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைப்பதால் அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பதா என்பதை முதல்வர் முடிவு செய்வார்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் தற்போது முன்னணி நிலவரங்கள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனைத்து முடிவுகளும் வந்த பிறகு தான் முழு வடிவம் பெறும் இருப்பினும் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் இதில் ஆறுதி பெரும்பான்மை வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது

Views: - 253

0

0