ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘O2’. அதிகாரப்பூர்வ அறிவிப்பு. !

Author: Rajesh
6 May 2022, 6:48 pm
Quick Share

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேநேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏற்கனவே ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜிகே.விஷ்ணு இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார்.

‘O2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படம் விரைவில் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் ஓடிடியில் வெளியாவதை போல், இந்த படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 687

0

0