தனிமைப்படுத்தபட்ட 21 தமிழக தொழிலாளர்கள்….

23 May 2020, 7:19 pm
Quick Share

கோவை: வெளிமாநிலங்களில் பணிபுரிந்து தமிழகம் திரும்பிய 21 தமிழக தொழிலாளர்கள் தனிமைப்படுத்தபட்டனர்.

கோவை மாவட்டத்தில் குஜராத்,மகராஷ்ரா,மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த தமிழக தொழிலாளர்கள் இன்று தமிழகம் திரும்பியுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 21பேர் அன்னூரில் முகாம் அமைத்து தனிமைபடுத்தபட்டுள்ளனர். அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் அனைவரும் இரு தினங்களுக்கு தனிமைபடுத்தபட்டு வைக்கபட்டுள்ளனர்.

தினசரி வெளிமாநிலங்களில் இருந்து கோவை திரும்புவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை அடுத்து இரண்டு நாட்கள் இங்கே தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டவுடன், அவரவர் வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.