வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…

22 March 2020, 2:16 pm
Erode shops closed
Quick Share

ஈரோடு: சுய ஊரடங்கை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

உலகை உலுக்கிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இதனை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் தமிழகம் முழுவதும் காலை 7மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் முக்கிய சாலைகளான பன்னீர்செல்வம் பூங்கா, ரயில்நிலையம் அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து இன்றியும் மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.