மதுபான கடையில் அலைமோதிய மது பிரியர்கள்…

24 March 2020, 1:34 pm
Quick Share

ஈரோடு: உலகை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஈரோடே காலியாக காட்சியளிக்கும் நிலையில் மதுபான கடையில் மட்டும் மதுப்பிரியர்கள் கூட்டமாக வரிசையில் நின்று மது வாங்கிச் செல்வது நடந்து வருகிறது.

சீனாவில் உருவாக்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி மிகவும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா காய்ச்சல் பரவி வருவதை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள், பெரிய கடைகள் கல்லூரி, பள்ளிகள் மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் அரசு உடனடியாக மூட உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் மற்றும் பேருந்துகள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆனால் ஒயின் ஷாப்பில் மக்கள் கூட்டம் குறையவே இல்லை மதுப்பிரியர்கள் கூட்டமாக வரிசையில் நின்று மதுக்கடை வாங்கிச் செல்வது நடந்து வருகிறது. ஒருபக்கம் முககவசத்திற்காக பொதுமக்கள் மெடிக்கலில் நிற்க அதே நேரம் ஒயின்ஷாபிலும் மக்கள் கூட்டம் இருந்துதான் ஆகிறது.