தமிழக – ஆந்திர எல்லையில் தீவிர மருத்துவ பரிசோதனை…

24 March 2020, 12:35 pm
Quick Share

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் இன்று மாலை 144 தடை சட்டம் அமலாவதையொட்டி கிருஷ்ணகிரியில் தமிழக – ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்செரிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடைச்சட்டம் அமலாவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில எல்லையிலுள்ள சோதனை சாவடிகளிலும் தீவிரவமாக கண்காணிப்பில் ஈடுபட்டு அதிகாரிகள் வருகின்றனர்.


தமிழக – ஆந்திர எல்லையான காளிக் கோவில் சோதனை சாவடிபகுதியில் காவல்துறை சார்பில் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார், வருவாய்துறை சார்பில் பறக்கும் தாசில்தார் பிரதாப் மற்றும் குழுவினர், மருத்துவத்துறை சார்பில் மருத்துவர் பிரியா மற்றும் ஆம்புலன்ஸ்யோட கூடிய மருத்துவக்குழு உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், ஆந்திராவிலிருந்து வருவோர்க்கு காய்ச்சல் உள்ளதா எனவும், கை கால்களுக்கு தொற்று பராவாமல் இருக்க மருந்து கொடுத்தும், வருபவர்கள் பெயர், முகவரி, செல்பேசி எண்கள் சேகரிக்கபட்டும் வருகிறது. ஆந்திரம் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை திருப்பி அனுப்பட்டு வருகிறது.