கிருஷ்ணகிரியில் மேலும் இரண்டு பெண்களுக்கு கொரோனா…

4 May 2020, 11:00 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் இரு பெண்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே 37 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரானா தொற்று இல்லா மாவட்டமாக. பச்சைமண்டலமாக தொடர்ந்து வந்தது. இதையடுத்து சூளகிரி பகுதியில் உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் உட்பட இரு பகுதிகளிலில் உள்ள 67, 65 வயது உள்ள இரு வயதான பெண்களுக்கு கொரானா தொற்று உறுதியானது.

இதை தொடர்ந்து சூளகிரி பகுதி, பேருந்துநிலையம். உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சூளகிரி கிருஷ்ணகிரி ஒசூர் சாலை மற்றும் நகரின் அனைத்து சாலைகளும் மூடபட்டது கொரா தொற்று உறுதியான இரு பெண்கள் தனிமைபடுத்தபட்டு அவர்களை சிகிச்சைக்காக சேலத்திற்க்கு அரசு மருத்துவ குழுவினரால் அழைத்துசெல்லபட்டனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய 45 நபர்களுக்கு ரத்தமாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட அரசு மருத்துவ குழுவினரும், காவல்துறையினரும் இணைந்து சூளகிரி பகுதியில் முகாமிட்டு இரு பெண்களுக்கு கொரானா தொற்று பரவியது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சூளகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருமுறை ஆரஞ்சு மண்டலமாக மாற இருந்து தப்பித்து பச்சைமண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறிஉள்ளது