அரசு மருத்துவமனையில் மாநகராட்சி அலட்சியம்…. நோய் பரவும் அபாயம்…

23 March 2020, 10:17 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாநகராட்சி அலட்சியத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை நாள்தோறும் வெளி நோயாளிகளும் பலநூறு உள் நோயாளிகளும் கர்ப்பிணி பெண்கள் பிரசவ பெண்கள் என பல்லாயிரம் பேருக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால் பிரசவம் பார்க்கும் அறைக்கு பக்கத்திலேயே குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நாள்தோறும் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதை மாநகராட்சியில் நிர்வாகம் தினந்தோறும் குப்பைகளை அகற்றாத காரணத்தினால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகாரித்துள்ள நிலையில், அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து உடனாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை பணியில் அமர்த்த கோரிக்கையும் விடுத்துள்ளனர்.