அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பொதுமக்கள் வீடுகளில் இருக்க கோரிக்கை…

26 March 2020, 2:01 pm
Quick Share

கிருஷ்ணகிரி: நாடு முழுவதும்144 தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி பகுதிகளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

நாடு முழுவதும் 144 தடை சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இன்று கிருஷ்ணகிரி பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

தாலுக்கா காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, காவல்துறை மற்றும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் அரசு வரும் அரசு அலுவலர்கள் தவிர மற்றவர்களை திருப்பி அனுப்பி வைக்கும் பணியில் காவல்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொதமக்களிமம் பேசிய காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், கொரோனா ஒருவருக்கு பரவினால் அதன்மூலம் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே விழிப்புணர்வுடன் செயல்பட்டு சாலையில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.

மேலும் காவல்துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு 300 கிலோ மீட்டர் தூரத்தில் பிரிந்து வந்து கொராத தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அரசின் வேண்டுதலுக்கு அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.