கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம்… மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை…

4 May 2020, 3:21 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வருட கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உடனாடியாக நடவடிக்கை கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரிஅருகே உள்ள பந்திகுறி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் வெளியேற வழியில்லாமல் ஊர் நடுவே குட்டைப்போல் வருடக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்தொற்று உருவகிறது. குழந்தைகள் பலர் தண்ணீரில் விழுந்துவிடுவதும் தேங்கி நிற்கும் சாக்கடையால் பலர் பாதிக்கபடுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் கிராம சபாகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனார்.

மேலும் கழிவுநீர் செல்லும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் கால்வாய் செல்லாத வகையில் ஒருசிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த கிராமமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், கிராமத்தில் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் சாக்கடை வசதி அமைத்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்.