போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு… வடிவேலு பாணியில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…

30 July 2020, 10:16 pm
Quick Share

மதுரை: போகிற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு..’ என நடிகர் வடிவேலு பாணியில் பேசி கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனோ நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர்,

வடிவேல் சொன்னது போல போறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு இப்போது குணமடைந்து விட்டது.என் வாழ்வில் உறுதுணையாக இருக்கும் மனைவிக்கு தொற்று ஏற்பட்ட போது அஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஆறுதல் சொல்ல சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம். நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபடவுள்ளேன் என்று கூறினார்.