தனியார் வணிக வளாகம் தீ பிடித்து எரிந்ததில் பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்..!

19 March 2020, 12:34 pm
Quick Share

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் தனியார் வணிக வளாகம் தீ பிடித்து எரிந்ததில் பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதமானது.

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மளிகைப்பொருட்கள் வணிக வளாகம் உள்ளது. காலை 5- மணி அளவில் திடீரென வணிக வளாகம் தீ பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்ததால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. எரிந்து போன பொருட்களின் மதிப்பு 10 – லட்ச ரூபாய் அளவிற்கு இருக்கும் என வணிக வாளகத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.