சிறார்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது – மாத்திரைகள் பறிமுதல்.!!!!

31 July 2020, 10:20 pm
Quick Share

மதுரை: மதுரையில் சிறார்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது, மருந்தகத்தில் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தான் அதிகளவு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அவர்கள் போதை மாத்திரைகள் உட்கொள்வதாகவும், தொடர்ந்து புகார் வந்த நிலையில்,மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் துறை ஆணையரின் தனிப்படை பிரிவினர் மதுரை வண்டியூர் பகுதியில் மாத்திரை வைத்திருந்த சிறார் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய மருந்தகத்தில் வாங்கியதாக தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சிறுவர் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அதிரடியாக மருந்தகத்தில் சோதனை செய்தபோது, சட்டத்திற்கு புறம்பாக மருந்தகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மருந்தகத்தின் உரிமையாளர் ராஜாமுகமது என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து சுமார் 273 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை மாத்திரை மருந்தகத்தில் விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.