மான் கறியை எடுத்துச் சென்ற 6 பேருக்கு அபராதம்…

23 May 2020, 10:27 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மான் கறியை எடுத்துச் சென்ற ஆறு நபர்களுக்கு வனத்துறையினர் 1,50,000 அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடம்பள்ளி வனப்பகுதியில் தாளவாடி வனச்சரகர் சிவகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வன பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் 6 பேர் கூட்டாக அமர்ந்திருப்பதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் 6 பேரும் அதே பகுதியை சேர்ந்த பசவண்ணா, குன்னீறன், நஞ்சப்பன், சுப்பிரமணியன், மாறன், மற்றும் வேலுச்சாமி என்பதும் அவர்கள் கோடம்பள்ளி வனப்பகுதியில் இறந்துகிடந்த மானை எடுத்துவந்து பங்கு போட்டு பிரித்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த வனத்துறையினர் மான் கறியை எடுத்து வந்த நபர் ஒருவருக்கு தலா 25,000 வீதம் சுமார் 1,50,000 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.