மதுப்பிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்…. வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக் கடைகள்…

21 June 2020, 9:44 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மது வாங்க வந்த நபர்களை போலீசார் சரமாரியாக தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் மதுபான கடையில் அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த சென்ற காவல்துறையினர் அங்கு இருந்தவர்களில் சிலரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் சிக்கிய ஒரு நபரை மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் உள்ளிட்ட போலீசார் வடிவேல் படகாமெடியை மீஞ்சூம் விதமாக சகட்டுமேனிக்கு மொட்டைத்தலை என்றும், கூட பாராமல் லத்தி மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்து தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில், மாவட்டம் முழுவதும் தற்போது 78 அரசு மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டது. ஆனாலும் போலீசார் தாக்குதல் நடத்தியதாலும், முழு ஊரடங்கினாலும் டாஸ்மாக் கடைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.