ஸ்டிக்கர் ஒட்டும் பணியை பார்வையிட்ட ஆட்சியர்…

23 March 2020, 8:45 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் சுய விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் பார்வையிட்டார்.

தாய்லாந்து நாட்டிலிருந்து ஈரோட்டிற்கு வந்தவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையிவ் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த கொல்லம்பாளையம் மற்றும் அவர்கள் பயணித்த இடங்களான சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் 136 குடும்பங்களை சேர்ந்த 695 நபர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும். அவர்களின் கைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அடையாள முத்திரை இடப்பட்டது மற்றும் அவர்களின் குடும்பங்களின் சுய விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இவர்களுக்கு தேவையான அனைத்து அன்றாட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.