புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது…

21 July 2020, 10:18 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் குட்கா பான்மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் ஜானகிபுரம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பகுருதீன் மற்றும் முகமது ரபிக் ஆகிய இருவர் பான்மசாலா விற்றது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த தாலுக்கா போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.