மனித தலையை வெட்டி நரபலி? போலீசுக்கு சொல்றேன் – பார்த்திபன் ட்வீட்..!

Author: Vignesh
5 December 2023, 2:15 pm
parthiban updatenews360
Quick Share

சமூக வலைதளங்களில் நரபலி கொடுக்கப்பட்டு பூஜை செய்வது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முந்தைய காலகட்டங்களில் நரபிலியினை கொடுத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்ததாகவும், அது மனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்தவுடன் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது வரை நம்பபட்டு வருகின்றது.

இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற செயல்கள் நடப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், தற்போது பகீர் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு இளைஞர்களின் தலையை கொய்து அதற்கு ஒருவர் பூஜை செய்ய சாமி ஆடுவது போல் பெண் ஒருவர் உக்கிரமாக அந்த வீடியோவில் நிற்கிறார்.

இந்த வீடியோவை கண்ட பலர் கொதித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோ பெரும்பாலும் வைரலான நிலையில், நடிகர் பார்த்திபன் இந்த வீடியோவை பார்த்து கோபத்துடன்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 107

0

0